Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2 சட்டமன்ற தொகுதிகள் வீதம் சென்னையில் காங்கிரஸ் 8 மாவட்டங்களாக பிரிப்பு

டிசம்பர் 05, 2020 01:27

சென்னை: சென்னையில் தற்போது காங்கிரஸ் கட்சி மாவட்டங்கள் 4-உள்ளது. சோழிங்கநல்லுர், ஆலந்தூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகள் சென்னை மாநகரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து 2 முதல் 3 சட்டமன்ற தொகுதிகளை ஒரு மாவட்டமாக அரசியல் கட்சிகள் பிரித்துள்ளன.

அதன்படி காங்கிரசும் சென்னையை 8 மாவட்டங்களாக பிரித்துள்ளது. இதில் திருவொற்றியூர், ராயபுரம், ஆர்.கே.நகர் ஆகிய 3 தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும், பெரம்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர் ஆகிய 3 தொகுதிகளும் ஒரு மாவட்டமாகவும் பிரிக்கப்படுகிறது. துறைமுகம், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு ஆகிய தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும், எழும்பூர், அண்ணாநகர், வில்லிவாக்கம் ஒரு மாவட்டமாகவும் ஆகிய தொகுதிகள் பிரிக்கப்படுகிறது.

சைதாப்பேட்டை, தி-நகர், விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகள் அடங்கியது ஒரு மாவட்டமாகவும், மைலாப்பூர், வேளச்சேரி தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும் பிரிக்கப்படுகிறது. அதேபோல் மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும், சோழிங்கநல்லூர், ஆலந்தூர் ஆகிய தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும் பிரிக்கப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை புதிதாக 4 மாவட்டங்கள் உருவாக்கப்படுவதால் 4 புதிய மாவட்டத்தலைவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். புதிய மாவட்ட தலைவர் பதவியை பிடிப்பதற்காக நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கு பதவியை பெற்றுத்தருவதில் தீவிரமாக இருந்ததால் இழுபறி நீடித்து வந்தது. தற்போது சுமூகமாக பேசி முடிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில் நடந்த மூத்த தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டத்தில் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தவாரம் பட்டியல் வெளியாகிறது. அத்துடன் மாவட்ட தலைவர் பதவி காலியாக இருக்கும் கோவை மற்றும் நெல்லைக்கும் புதிய மாவட்டத்தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். செயல்படாத சில மாவட்டத் தலைவர்களையும் நீக்கிவிட்டு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
 

தலைப்புச்செய்திகள்