Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குப்பற கிடந்த நாயகிக்கு அந்த இடத்தில் டாட்டூ!

டிசம்பர் 02, 2020 08:48

சென்னை: சரத்குமார் நடித்த, ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நயன்தாரா. அடுத்தடுத்து காதல் கிசுகிசுக்களில் அகப்பட்டாலும் தற்போது தமிழ் சினிமாவில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற கௌரவத்துடன் கெத்தாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நயன்தாராவுக்கு முன்னணி நடிகர்களுக்கு இணையான அளவு ரசிகர் கூட்டம் உள்ளது. 

எனவே இவர் நடிப்பில் வெளியாகும் எல்லா படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் நயன்தாராவின் நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம்  வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது நயன்தாரா ‘நெற்றிக்கண்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த நிலையில் நயன்தாரா தனது முதுகில் மிகப்பெரிய பச்சை குத்திக்கொள்ளும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. பச்சை குத்திய அந்த அதிர்ஷ்டசாலி யாரோ? என அவரது ரசிகர்கள் பெருமூச்சு விடுகின்றனர்.

தலைப்புச்செய்திகள்