Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்திய சென்னையில் தயாநிதியுடன் மல்லுக்கட்டும் சாம் பால்

ஏப்ரல் 01, 2019 08:43

மத்திய சென்னை மக்களவை தொகுதி பா.ம.க வேட்பாளராக களம் இறங்கியுள்ள டாக்டர் சாம் பால், திமுக வின்  செல்வாக்குமிக்க தயாநிதிமாறனுடன் மோதும் சாம்பால், படித்தவர்,பண்பாளர் தொழிலதிபர், கல்வியாளர், வழக்கறிஞர், சமூக ஆர்வலர் .   டாக்டர். எஸ்.ஆர்.சாம் பால் என்கிற சாம். அரசியல்வாதியாக இப்போது தெரிந்தாலும் , அவர் சென்னை மக்களின் பெரும் சேவகராகவே இருக்கிறார். 

1996-2000 ஆம் ஆண்டு மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் பொறியியல் பட்டம் பெற்றவர், 2001 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாஸ்டர் இன் இண்டஸ்டிரியல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். இதை தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு கலிங்கா  பல்கலைக்கழகத்தில் நம்பகத்தன்மையில் தத்துவம் படித்து டாக்டர் பட்டம் பெற்றார். மேலும், 2010-12 பாண்டிச்சேரி டாக்டர்.அம்தேகர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். 

சிறந்த யோசனைகளுடன் சிறந்த தொழில் முனைவருக்கான பல்வேறு வாய்ப்புகளை உருவாக்க நினைத்தவர், சென்னையில் பால்சன்ஸ் குழுமத்தை நிறுவினார். அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் சட்ட தலைமை பொறுப்பை வகித்தவர், தனது புத்திசாலித்தனத்தால் பல்வேறு சர்வதேச பிராண்டுகளை சென்னை மற்றும் தென்னிந்தியாவில் அறிமுகப்படுத்தினார். 

டாக்டர்.சாம் பால் அவர்களால் கடந்த 2010 ஆண்டு பல விருதுகளை வென்ற சர்வதேச  சிகை  அலங்கார  நிறுவனமான  டோனி & கய்யை (Toni&Guy) அறிமுகப்படுத்தியவர்,  2013 ஆம் ஆண்டு  எஸ்ஸன்சுயல் (Essensuals) என்ற பெயரில் அந்நிறுவனத்தை  விரிவுப்படுத்தினார். இதன் மூலம் வேகமாக பரவிய இந்நிறுவனம் 9 ஆண்டுகளில் தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் 170 க்கும் மேற்பட்ட  கிளைகளாக  விரிந்தது. 

ஷாமின் காதல் கதை எப் & பி பிராண்ட்கள் மீது படர்ந்ததோடு, ஈரோப்பியன் பிஸ்ட்ரோ கான்சப்ட் அவுட்லெட், காச பிக்கோலா, உள்ளிட்டவைகளை அனைத்து வயதினருக்கும் வழங்க முடியும் என்பதையும் சாத்தியமாக்கி காட்டினார். இதனுடன்  24 மணி  நேரமும் ஹோம் டெலிவரி  மற்றும்  பார்சல் வழங்கும் உணவகமான  டான் & டஸ்க் (Dawn & Dusk) நிறுவினார். 

பிரீமியம்  எஃப் & பி  பிராண்ட்களைக் கொண்ட குழுவின்  ஹெகன் டாஸ் பிராஞ்சீஸ்  சேர்த்துக்கொள்ளப்பட்டது.  ஹெகன்  டாஸ் உலக அளவில் பிரசித்தி பெற்ற  ஐஸ் க்ரீம், டெசர்ட்  வகைகளை  கொண்டது.  இந்த குழுவின் தலைமை கிளை பிரசித்தி பெற்ற ஜெர்மன் டோனர் கெபாப் நிறுவனம், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகம்  என நான்கு மாநிலங்களில் உள்ளது. ஜெர்மனியின் நம்பர்  1 துரித உணவகமான இந்நிறுவனம்  ஆரோக்கியம்,  சத்து நிறைந்த மற்றும் பாரம்பரிய கெபாப்களை உருவாக்கி வருகிறது. இதனுடன், சென்னை பல்லாவரத்தில் பிரசித்திப்பெற்ற யா.முஹைய்யதீன் பிரியாணி  உணவகமும் இந்நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

இந்த  குழுமத்தில் உள்நாட்டு  எஃப் & பி பிராண்டுகள்  சென்னை  முழுவதும் இயக்கப்பட்டு வருகிறது.  அதில், ஜோனஸ் பிஸ்ட்ரோ,  ஸ்லாம் லைப் ஸ்டைல் அண்ட்  பிட்னஸ்  ஸ்டுடியோஸ், சாராஸ் சோல் கிச்சன்  அண்ட்  சக்ரா  அர்பன் ஸ்பா  உள்ளிட்ட பல நிறுவனங்கள் செயல்படுகின்றன.  சமீபத்தில் இக்குழுமத்தில் சுல்தான் பிரியாணி என்ற உணவகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் சுவை மிக்க பிரியாணி உணவகமான இந்த புதிய உணவகம் தென்னிந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்யப்படுவதோடு, 225 கிளைகள் திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

டாக்டர்.எஸ்.ஆர்.சாம் பால் சிந்தனையில் உருவான தென்னிந்தியாவின் முதன்மையான லைப் ஸ்டைல் பத்திரிகையான புரோவோக் நான்கு ஆண்டுகளில் 11 லட்சம் வாசகர்களை பெற்றது.  மேலும்,  டிஜிட்டல் தொழில்நுட்பத்திலும் வெளியான இந்த பத்திரிகை புரோவோக் டிவி-யாகவும் உருவெடுத்தது. இதை தவிர பால்சன் குழுமத்தில் திரைப்படங்களை தயாரிக்க மற்றும் விநியோகம் செய்ய பால்சன்ஸ் மீடியா பிரைவேட் லிமிடேட் என்ற பெயரில் புதிய நிறுவனமும் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின்  மூலம் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்லும் சிறந்த படங்கள் தயாரிக்கப்படுகிறது.  
சத்யராஜ்  நடிப்பில்  ‘ஒரு நாள் இரவில்’ என்ற  படத்தை  தயாரித்த  இந்நிறுவனம்  மேலும்  பல சிறந்த படங்களை  விரைவில்  தயாரிக்க  உள்ளது. 

பாண்டிச்சேரிக்கு  மையமாகவும்  மற்றும்  சென்னைக்கு அருகில், சாம் பால் கல்வி அறக்கட்டளை சார்பில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. கிரிஸ்ட் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, டாக்டர்.எஸ்.ஜே.எஸ் பால் நினைவு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, ஸ்டண்ட்போர்ட் சர்வதேச மற்றும் பில்லாபோங் சர்வதேசம் என பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன. 

சாம் பால் அவர்கள், தனது புது  புது சிந்தனை மூலம் பல்வேறு புதிய தொழில்களை உருவாக்குவதோடு, தொழில்களை விரிவுப்படுத்தி , ஒவ்வொரு நாளும் பால்சன் குழுமத்தில் உள்ள நிறுவனங்கள் அதிகரிக்கவும் செய்து வருகிறார். 

திரையுலகில்  நடிகராகவும்  அறிமுகமான சாம் பால், 2015 ஆம் ஆண்டு வெளியான ‘பத்ரா’ படத்தில் வில்லனாக நடித்தார்.  மேலும்,  விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘வனமகன்’ படத்தில் போலீஸ்  அதிகாரி வேடத்தில் நடித்தவர், 2018 ஆம் ஆண்டு பிரபு தேவா நடிப்பில் வெளியான ‘தேவி’ படத்திலும் வில்லனாக நடித்தார். 

சாமான்ய  மக்களுடன்  எப்போதும்  நெருக்கமாக இருக்கும் சாம் சென்னை வாசி என்பது கூடுதல் சிறப்பு. தான்  சந்தோஷமாக இருப்பதோடு,  தன்னை சுற்றி இருப்பவர்களையும் எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் சாம், சமூக சேவையிலும் ஆர்வம் மிக்கவர். கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சாம் மற்றும் அவரது குழுவினர்  ‘டீம் ஹோப்’ என்ற பெயரில் மகத்தான பணி ஆற்றியதோடு, பலரது உயிரையும் காப்பாற்றினார்கள். 

கடந்த  2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்த சாம் பாலை, அக்கட்சி மாநில ஐடி துறை தலைவராக்கியது. 

விருதுகள் & அங்கீகாரங்கள்: 
2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த தொழிலதிபர் விருது (தொழிலதிபர் கவுன்சில் ஆப் இந்தியா) 
ஸ்பிரிட் ஆப் வாலண்டீர்ஸ் 2016 (தி நியூ பேஸ் ஆப் சொசைட்டி) 
நைட்டிங்கில் நேஷ்னல் பில்டர் 2016 (லயன்ஸ் கிளப், சென்னை) 
குட் சமரிட்டன் 2015 
இந்தியன் சலூன் அண்ட் வெல்நெஸ் விருது 2016 
சிறந்த இளம் தொழிலதிபருக்கான விருது - பியூட்டி பொலிஸ் அச்சிவர்ஸ் விருது 2016 
ஃபேஸ் ஆப் மெட்ராஸ் 2015 
வி.இ விருது 2014 

பால்சன்ஸ் குழுமம்: 
சிறந்த சர்வதேச சலூன் குழுமம் (டோனி & கய்) மற்றும் மெட்ராஸ் பிராஞ்சிஸ் (Paulsons Beauty & Fashion Private Limited) இந்தியன் சலூன் அண்ட் வெல்நஸ் விருது 2017 
சிறந்த மாநில உடற்பயிற்சி  மையத்திற்காக  விருது (SLAM Lifestyle and Fitness Studio) இந்தியன் சலூன் அண்ட் வெல்நஸ் விருது 2017  
சிறந்த ஐரோப்பிய உணவகத்திற்கான விருது (Jonah’s Bistro) டைம்ஸ் புட் கைட் விருது 2017 
சிறந்த வெளிநாட்டு சமையல் உணவகத்திற்கான இத்தாலியன் விருது (Jonah’s Bistro) ரெஸ்ட்டாரண்ட் இந்தியா 2016 விருது (தென்னிந்திய எடிசன்) 
சிறந்த வாடிக்கையாளர் சேவை விருது (Toni&Guy) இந்தியன் சலூன் அண்ட் வெல்நஸ் விருது 2016 
சிறந்த ஐரோப்பிய உணவகம் (Jonah’s Bistro) டைம்ஸ்  புட்  கைட்  விருது  2016 
சிறந்த பலதரப்பட்ட உணவகத்திற்கான விருது (Jonah’s Bistro) தமிழ்நாடு சுற்றுலாத்துறை  விருது  2015 
சிறந்த அழகு மற்றும் அலங்காரத்திற்கான  வெட்டிங்  ஐகான்  விருது 2015 (Toni&Guy) MarriageColours.com 
பிரபலமான சலூன்  விருது (Toni&Guy) சினிமா ஸ்பைஸ்  விருது 2014 
அடுத்த தலைமுறைக்கான  சலூன்  விருது (Essensuals) சினிமா  ஸ்பைஸ்  விருது 2014 
சிறந்த ஐஸ்  க்ரீம் (Haagen-Dazs) டைம்ஸ்  புட்  கைட்  விருது  2014 
சிறந்த மதிப்பிடப்பட்ட Star of Haagen-Dazs by General Mills India in 2013 . தொழில் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து , ஆயிரக் கணக்கானோருக்கு  வேலை வாய்ப்புகளை அளித்திருக்கிறார். அரசு அதிகாரத்துடன் மக்கள் சேவை செய்ய விரும்பும், டாக்டர் சாம் பால் மத்திய சென்னையில்  தயாநிதியுடன் மல்லுக்கட்டுகிறார்.

தலைப்புச்செய்திகள்