Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அனுமதித்தால் யாத்திரை, இல்லையெனில் போராட்டம்- எச்.ராஜா

நவம்பர் 06, 2020 06:20

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து பா.ஜ.க. சார்பில் இன்று வெற்றிவேல் யாத்திரை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த யாத்திரை முருகபெருமானின் அறுபடை வீடுகள் உள்ள நகரங்கள் வழியாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பா.ஜ.க.வினர் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பா.ஜ.க.வினரின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

தமிழக அரசு சார்பில் பா.ஜ.க.வினரின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கவில்லை என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. இதனால் திருத்தணியில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். இதையடுத்து வேல் யாத்திரை தொடங்க உள்ள நிலையில் பாஜக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் எச். ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவல் துறை அனுமதித்தால் பாஜக வேல் யாத்திரையை நடத்தும். இல்லையெனில் போராட்டம் நடத்தும். இந்துக்களை இகழ்வாக பேசும் மு.க.ஸ்டாலின் போன்றவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவே வேல் யாத்திரை. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்