Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஈரோட்டில் பிரபலமான கல்வி நிலையங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை: கணக்கில் வராத கோடிக்கணக்கான ஆவணம் பறிமுதல்

அக்டோபர் 29, 2020 07:37

ஈரோடு: ஈரோட்டில் தனியாருக்கு சொந்தமான பிரபல கல்வி நிறுவனங்களில் சென்னையைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கணக்குகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் அதிகாரிகளால் பறமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஈரோட்டில் தனியாருக்கு சொந்தமான நந்தா கல்வி குழுமங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் கலை அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்டவைகளில் சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோர் பல பிரிவுகளாக பிரிந்து நேற்றுமுன்தினம் காலை முதல் இரவு தொடங்கி வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக ஈரோடு நாராயண வலசு பகுதியில் செயல்பட்டு வந்த நந்தா சி.பி.எஸ்.இ. பள்ளி மற்றும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே மூலக்கரை வாய்க்கால் மேடு பகுதியில் செயல்பட்டுவரும் நந்தா தொழில்நுட்பக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இடைவிடாது தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கணக்குகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தலைப்புச்செய்திகள்