Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடலூர் குமளங்குளம் ஊராட்சி தலைவர் பதவி: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அக்டோபர் 29, 2020 05:22

கடலூர்: கடலூர் அருகே ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு பதிலாக தோல்வியடைந்த வேட்பாளருக்கு சான்றிதழ் வழங்கி வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவித்தனர். சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்று போராடி ஆட்டோ சின்னத்தில் நின்ற ஜெயலட்சுமி தனது வெற்றியை உறுதி செய்துள்ளார். கடலூர் குமளங்குளம் 4,139 ஓட்டுகள் உள்ள ஊராட்சி தலைவர் பதவிக்கு பூட்டுசாவி சிண்ணத்தில் விஜயலட்சுமி என்பவர் 1,179 ஓட்டுகள் பெற்றார். 

ஆட்டோ சின்னத்தில் ஜெயலட்சுமி என்பவர் 2,860 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதில், ஆட்டோ சின்னம் வெற்றி பெற்றது. ஆனால், தேர்தல் அதிகாரிகள் 1,681 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்காமல் தோல்வியடைந்த விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவித்து சான்றிதழும் அதிகாரிகள் வழங்கினர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜெயலட்சுமி ஊர் மக்களை திரட்டி பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும் தேர்தல் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் ஜெயலட்சுமி உரிய ஆவணங்களுடன் உயர் நீதிமன்றத்தை நாடினார். வழக்கினை விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

அந்தத் தீர்ப்பில் ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாகவும் விஜயலட்சுமி தோல்வியடைந்ததாகவும் அறிவித்து ஒருவாரத்திற்குள் மாவட்ட நிர்வாகம் அவரை பதவி பிரமாணம் செய்வதற்கு ஏற்பாடு செய்யவும் உத்தரவிட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுபோன்ற வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் 285 வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில் கடலூர் குமளங்குளம் வேட்பாளர் ஜெயலட்சுமி முதல் முறையாக வெற்றி பெற்றதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்