Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செல்போனை திருடி விற்ற ஆன்லைன் நிறுவன ஊழியர் கைது

அக்டோபர் 22, 2020 06:32

புதுடெல்லி: தெற்கு டெல்லியின் கிட்வவாய் நகர் பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் பிரபல ஆன்லைன் நிறுவனத்தில் செல்போன் ஒன்றை ஆர்டர் கொடுத்திருந்தார். அதற்கான தொகையையும் செலுத்தி விட்டார். கடந்த 1-ந்தேதி ஆன்லைன் நிறுவன ஊழியர் ஒருவர் செல்போனுடன் வந்தார். ஆனால் வாடிக்கையாளரிடம் செல்போனை கொடுக்காமல், உங்களது ஆர்டர் ரத்தாகி விட்டது, உங்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆன்லைன் நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, செல்போன் டெலிவரி செய்யப்பட்டு விட்டதாக கூறியுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், செல்போனை டெலிவரி செய்ய வந்த ஆன்லைன் நிறுவன ஊழியர் மனோஜ் (வயது 22), அந்த செல்போனை திருடி விற்றுவிட்டு, ஆர்டர் ரத்தாகி விட்டதாக நாடகம் ஆடியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் செல்போனும் பறிமுதல் கைப்பற்றப்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்