Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குஷ்பு பாஜக நிர்வாகியை அறைந்தார் என கூறி வைரலாகும் வீடியோ

அக்டோபர் 20, 2020 07:49

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜக கட்சியில் இணைந்தார். 2015 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் செய்தி தொடர்பாளராக இருந்தார்.

பாஜக கட்சியில் அக்டோபர் 12 ஆம் தேதி குஷ்பு இணைந்தார். இதைத் தொடர்ந்து பொது வெளியில் நபர் ஒருவர் குஷ்பு ஓங்கி அறையும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில் இருப்பவர் பாஜக நிர்வாகி என்பதும், அவர் குஷ்புவிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெங்களூரு நகரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது நடைபெற்றது. மேலும் வீடியோவில் தாக்கப்பட்ட நபர் பாஜக நிர்வாகி தான் என கூறும் தகவல் இடம்பெறவில்லை, 

அந்த வகையில் வைரலாகும் குஷ்பு வீடியோ சமீபத்தில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது. மேலும் வீடியோவில் குஷ்பு தாக்கிய நபர் பாஜக கட்சியை சேர்ந்தவர் இல்லை என தெரிகிறது. போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
 

தலைப்புச்செய்திகள்