Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்-பா.ஜ. தேசிய தலைவர் உறுதி

அக்டோபர் 20, 2020 05:32

சிலிகுரி: கொரோனாவால் தாமதமான குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்,''  என பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில், தலித்துகள், கோர்காக்கள், ராஜ்பன்ஷிகள் மற்றும் பிற பழங்குடியினர் உள்ளிட்ட சமூகக் குழுக்களுடன் பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா 

கொரோனாவால் தாமதமான குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். இப்போது விதிகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இது மிக விரைவில் செயல்படுத்தப்படும். அனைத்து மக்களுக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தின் நன்மைகளைப் பெறுவார்கள் என்று பாரதிய ஜனதா உறுதி அளித்துள்ளது. 

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆட்சியில் இந்துக்கள் துன்புறுத்தப்படுகின்றனர். மம்தாவின் அரசு பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தை அமல்படுத்த மறுப்பதால் 76 லட்சம் விவசாயிகளுக்கு அதன் பலன் கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றால், மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இந்த திட்டத்தை நாங்கள் வழங்குவோம். இவ்வாறு ஜே.பி.நட்டா உறுதியளித்தார். 

தலைப்புச்செய்திகள்