Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவை வட்டாட்சியர் ஆஃபீசில் லஞ்சம்: கணக்கில் வராத ரூ.50 ஆயிரம் பறிமுதல்

அக்டோபர் 17, 2020 04:31

கோவை: கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.50 ஆயிரம் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகளவில் லஞ்சம் பெறுவதாகக் குற்றச்சாட்டு நிலவி வந்த சூழலில், இப்போது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தீவிர சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

கோவையில் அரசு அதிகாரிகள் அதிகளவில் லஞ்சம் வாங்கி வருவதாகக் குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதற்கிடையே இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் புகார்கள் குவிந்து வந்துள்ளன. இது தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்படும் என லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கூறி வந்தனர். இந்த சூழலில் கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் கடந்த வெள்ளிக் கிழமை இரவு 7 மணியளவில் அதிரடியாக நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்பிட்ட அலுவலகத்தில் வட்டாட்சியராக மகேஸ்குமார் இருந்து வருகிறார். இவரது அலுவலகத்தை மையமாகக் கொண்டுதான் சோதனைகள் முழு வீச்சில் நடத்தப்படுகின்றன என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. சோதனை 3 மணி நேரத்திற்கு முன்புதான் தொடங்கியது என்பதால் இப்போதுவரை உறுதிப்படுத்தப்பட்ட எந்த தகவல்களும் வெளியாகவில்லை. கோவை மாவட்டத்தில் வருவாய் துறை அதிகாரிகள், ஊழியர்கள் அதிகளவில் லஞ்சம் வாங்குகின்றனர். 

இதன் காரணமாக மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்ற புகாரின் அடிப்படையில் வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சென்று சோதனை நடத்தியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கோயம்பத்தூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

தலைப்புச்செய்திகள்