Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உறவுகளை பகையாக்கிய தேர்தல்!

மார்ச் 25, 2019 06:02

கன்னியாகுமரி: அரசியல், சில நேரங்களில் உறவுகளை பகையாக்கி விடும் என்பது உண்மை. இந்த தேர்தலில், உறவுகள் எதிரணியில் இடம் பெற்று, ஒருவரை ஒருவர் திட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி தொகுதி யில், பா.ஜ., சார்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் மாநில செயல் தலைவர் வசந்தகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வசந்தகுமார், தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசையின் சித்தப்பா. எனவே, தமிழிசை, கன்னியாகுமரியில் பிரசாரத்திற்கு செல்லும் போது, சித்தப்பாவிற்கு எதிராக, பிரசாரம் செய்ய வேண்டியது கட்டாயம். 

ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் மகாராஜன் நிறுத்தப்பட்டுள்ளார். இவரது தம்பி, லோகிராஜன், அ.தி.மு.க., சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். உடன்பிறந்த அண்ணனும் தம்பியும், ஓட்டுக்காக, ஒருவரை ஒருவர் விமர்சித்து, பிரசாரம் செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் சார்பில், விஷ்ணுபிரசாத் நிறுத்தப்பட்டுள்ளார். இவர், பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணியின் மைத்துனர். அன்புமணி, ஆரணி தொகுதியில், மைத்துனருக்கு எதிராக பிரசாரம் செய்தாக வேண்டும். அதேபோல், அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களே, அ.ம.மு.க., சார்பில் போட்டி யிடுகின்றனர். இதன் காரண மாக, நட்பாக பழகிய அவர்கள், இந்த தேர்தலில் பதவிக்காக மோத வேண்டிய நிலைக்கு ஆளாகி உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்