Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை

அக்டோபர் 15, 2020 07:09

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் பாபனாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகள் வேகமாக நிரம்புகின்றன. திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்தில் உள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், குறிப்பாக அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த 2 தினங்களாக, விட்டு, விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் இம்மாவட்டத்தின், முக்கிய அணைகளாக பாபனாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த, 48 மணிநேரத்தில், அதாவது  இரண்டு நாட்களில் மட்டும்,   பாபனாசம் அணையில் 12 அடியும், சேர்வலாறு  அணையில் 21 அடியும்,  மணிமுத்தாறு அணையில் 5 அடியும், நீர்மட்டம்  அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால், இம்மாத இறுதிக்குள், இந்த மூன்று அணைகளும் முழுகொள்ளவை எட்டிவிடும். அணைகளின் நீர்மட்டம், கிடுகிடுவென உயர்ந்து வருவதால்,  நடப்பு பருவ, நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்