Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சேரி மாநிலத்தி தியேட்டர்கள் திறப்பு

அக்டோபர் 15, 2020 07:07

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஏழு மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டு படங்கள் திரையிடப்படுகின்றன. கொரோனா காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அடுத்தடுத்து பல்வேறு கட்டங்களாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன்படி கடைகள், ஓட்டல்கள், கடற்கரை, போக்குவரத்து, பள்ளிகள் திறப்பு என சகஜ வாழ்க்கைக்கு திரும்பின.

பொழுதுபோக்கு அம்சமான தியேட்டர்கள் திறக்கப்படுவது எப்போது? என்ற எதிர்பார்ப்பில் அனைத்து தரப்பு மக்களும் இருந்து வந்தனர். இந்தநிலையில் தற்போது மத்திய அரசு கடந்த 30ம் தேதி வெளியிட்ட 5-வது கட்ட தளர்வில் கொரோனா விதிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை பின்பற்றி தியேட்டர்களை திறக்கலாம் என்பது உள்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

அதன்படி, புதுச்சேரியில் நேற்று முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டு சினிமா காட்சிகள் திரையிடப்பட்டன. சுமார் 200 நாட்களுக்குப் பின் மீண்டும் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தூய்மைப்படுத்தும் பணி, தியேட்டர் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. ரசிகர்கள் சமூக இடைவெளி விட்டு அமரும் வைகயில் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் உள்ள ஒரு சில டிக்கெட் கட்டணமும், பார்க்கிங் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. அரசின் விதிமுறைகளின்படி தியேட்டர்களுக்கு வருபவர்களுக்கு வெப்ப பரிசோதனை நடத்தி சானிடைசர் வழங்கினர்.

தலைப்புச்செய்திகள்