Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அக்டோபர் 14, 2020 11:42

கும்பகோணம் அருகே வேப்பத்தூரில் 100 நாள் வேலைத்திட்டத்தை உடனே அமல்படுத்த கோரி அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கான ரங்கராஜன் குழு பரிந்துரையின்ப்படி  உடன் தமிழகத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் 100 நாள் வேலைத் திட்டத்தை உடனே அமல்படுத்து, கொரோனா கால நிவாரணமாக ஏழை குடும்பங்களுக்கு மாதத்திற்கு 7500 வழங்கிடு ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் ஓய்வூதியத்தை ரூபாய் 3000 உயர்த்தி வழங்கிடு பொது விநியோகத் திட்டத்தில் தொடர்ந்து அனைத்து குடும்பத்தினருக்கும் சமையல் பொருட்களை இலவசமாக வழங்கிடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வேப்பத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு  சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஜீவபாரதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில்   விவசாய தொழிலாளர் சங்க பொறுப்பாளர் சங்கர் அனைத்திந்திய  ஜனநாயக மாதர் சங்கம்  பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு 100 நாள் வேலைத் திட்டத்தை உடனே அமல்படுத்த கோரி கண்டன முழக்கம் எழுப்பினார்கள். இதே போன்று இன்று ஆடுதுறை திருநாகேஸ்வரம் மற்றும் பேரூராட்சிகளில் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைப்புச்செய்திகள்