Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அக்டோபர் 13, 2020 02:34

கும்பகோணத்தில் கடந்த ஆண்டு நெல்லிற்கு குவிண்டால் ஒன்று சன்னரகம் ரூ 1905 என்றும், பொது ரகம் ரூ 1865 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது, நடப்பாண்டிற்காண (அக்டோபர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரையிலான காலத்திற்கு) மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூபாய் 53 மட்டும் உயர்த்தியுள்ளது (அதாவது கிலோ ஒன்றுக்கு 53 பைசா) இதனால் நடப்பாண்டில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகம் ரூபாய் 1958 என்றும், பொது ரகம் ரூபாய் 1918 என்றும் நிர்ணயம் செய்துள்ளது.

இவ்விலை விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை இல்லை என்றும், இதனை கண்டித்து,  மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் திரண்டு, அரசு கலைக்கல்லூரி ரவுண்டனா அருகேயுள்ள காவிரியாற்றில் இறங்கி, நூதன முறையில், நெல்லை கொட்டி, கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர் தொடர்ந்து குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 3 ஆயிரமாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி க கோட்டாட்சியர் அலுவலகம் சென்று, கோட்டாட்சியர் அலுவலகத்தில் இல்லாததால், அவரது நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனுவையும் அளித்தனர் என்பது குறிப்பிடதக்கது.

தலைப்புச்செய்திகள்