Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கும்பகோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை!

அக்டோபர் 13, 2020 10:14

கும்பகோணம் மாவட்ட பதிவாளர் அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்குகிறது, இங்கு பத்திரப்பதிவு, திருமண பதிவு, கடன் அடமான ஒப்பந்தப்பதிவு, பதிவு பெற்ற பழைய ஆவணங்கள் நகல் பெறுதல், சொத்தின் மீதான வில்லங்கம் பார்த்தல் உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்படுகிறது, இப்பணிகளுக்கு  நாள்தோறும்  அதிக அளவில் லஞ்சம்  பெறப்படுவதாக, தஞ்சை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசாருக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து ஏராளமான புகார்கள் தொடர்ந்து சென்றது. 

இதன் பேரில் ஊழல் தடுப்புப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்  மனோகரன் தலைமையில் மற்றும் காவல் ஆய்வாளர் பத்மாவதி உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட தனிப்படையினர் கும்பகோணம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மாறுவேடத்தில் வந்து சுமார் ஒரு மணி நேரம் கண்காணித்த பிறகு அதிரடி சோதனையில் இறங்கினர் இதனால் அங்கு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசாரின் மூன்று மணி நேர அதிரடி சோதனையில்,  கணக்கில் வராமல் ஆவண வைப்பறையில் மறைத்து வைத்திருந்த ரூபாய்  2680 கணினி அறையில் இருந்து ரூபாய் 6900 மற்றும் சார்பதிவாளர் கைப்பையில் இருந்து ரூபாய் 13 ஆயிரத்தி 800 என மொத்தம்  ரூபாய் 23 ஆயிரத்தி 380ஐ கைப்பற்றி  பறிமுதல் செய்ததுடன் இது குறித்து இணை சார்பதிவாளர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் ஆகிய மூவர் மீதும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பணம்  நடைபெற்ற  28 ஆவண பதிவுகளுக்காக பெறப்பட்ட லஞ்ச தொகையாக இருக்ககூடும் என தெரிய வந்துள்ளது கும்பகோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்றிரவு நடைபெற்ற ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரின்
சோதனை சக பதிவுத்துறை ஊழியர்கள், மற்றும் பத்திரப்பதிவு துறையுடன் தொடர்புடைய நபர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பொது மக்களிடையே பரபரப்பையும் ஏற்படுத்தியது.

தலைப்புச்செய்திகள்