Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தி.மு.க.வுக்கு உறுப்பினர்கள் சேர்ப்பு முகாம்

அக்டோபர் 13, 2020 08:21

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் ஊராட்சியில், இணைய வழியில் தி.மு.க.வுக்கு உறுப்பினர்கள் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது.
தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் பெல்சி துவக்கி வைத்தார்! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ள, எல்லோரும் நம்முடன் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், தெற்கு கள்ளிகுளம் ஊராட்சிப்பகுதிகளில், இணைய வழியில் தி.மு.க.வுக்கு உறுப்பினர்கள் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.

மொத்தம் இரண்டாயிரம் பேர்களை, உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்னும் இலக்குடன் கூடிய, இந்த சிறப்பு முகாமினை, தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் பெல்சி, கணிப்பொறியினை இயக்கி, முறைப்படி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தெற்கு கள்ளிகுளம் கிளை தி.மு.க. செயலாளர் டெர்மின் ராஜா, இளைஞர் அணி அமைப்பாளர் ஜெபஸ்டின் நிமலேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

முன்னதாக, வெவ்வேறு கட்சிகளில் இருந்து விலகிய,  பணகுடியை சேர்ந்த ஐம்பது இளைஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்       ஞான திரவியம் முன்னிலையில்,  தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும்,  நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம், சால்வை அணிவித்து வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.
 

தலைப்புச்செய்திகள்