Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருநெல்வேலியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க.வில் ஐக்கியம்

அக்டோபர் 12, 2020 11:50

திருநெல்வேலி: திருநெல்வேலியில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள், அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். திருநெல்வேலி புறநகர் பகுதிகளான, மேலப்பாலாமடை மற்றும் சேந்திமங்களம் ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள் பலர், திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்து விலகி, தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். 

திருநெல்வேலி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா மற்றும் அவைத்தலைவர் பரணி, .சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில்  இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட கழக செயலாளர் செந்தில் ஆறுமுகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஜெரால்டு,  பகுதி  செயலாளர் வழக்கறிஞர் ஜெனி, தச்சை பகுதி செயலாளர் மாதவன், மானூர் தெற்கு ஒன்றிய செயலாளர் லெட்சுமண பெருமாள், வட்டச் செயலாளர் வெற்றிவேல்,  பாளை அம்மா பேரவை செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன்,  மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் பாண்டி ஆகியோர்  கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்