Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சேலம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சரவணன் போட்டி

மார்ச் 23, 2019 11:25

சேலம்:  அதிமுக, பாஜக கூட்டணியில் சேலம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வழக்கறிஞரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான கே ஆர் சரவணன் போட்டியிடுகிறார். இவரது தந்தை பெயர் சீனிவாசன் ஓய்வு பெற்ற டெபுடி கலெக்டர் ஆவார்.  தாயார் பெயர் பானுமதி. 

இவருக்கு சுவிதா  என்ற மனைவியும், மஞ்சரி, நட்ஷத்திரா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் 25.3.1974 பிறந்துள்ளார். சட்டப் படிப்பு படித்துள்ள இவர் வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார். 1992 முதல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தீவிர உறுப்பினராக இருந்து வருகிறார். அஸ்தம்பட்டி பகுதி கழக செயலாளராக இருந்து வருகிறார். மேலும் சேலம் மாநகர்மாவட்ட எம்ஜிஆர்  மன்ற துணை செயலாளராகவும் இருந்து வருகிறார். 211முதல் 2016 வரை சேலம் மாமன்ற உறுப்பினர் பதவி வகித்துள்ளார்.  

தற்போது அதிமுக பாஜக கூட்டணி சார்பில் சேலம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுக்கிறார். அவரை கட்சி நிர்வாகிகள்,பகுதி,  ஒன்றிய கழக நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்தினார்.

தலைப்புச்செய்திகள்