Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

5-வது வெற்றி யாருக்கு?- ஷார்ஜாவில் ஆர்சிபி - கொல்கத்தா நாளை பலப்பரீட்சை

அக்டோபர் 11, 2020 12:35

ஷார்ஜா: ஆர்சிபி அணி இந்த முறை எப்படியாவது ஐபிஎல் கோப்பையை வென்றுவிட வேண்டும் என்ற தீர்மானத்தில் உள்ளது. பஞ்சாப், டெல்லி அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்துள்ளது. தேவ்தத் படிக்கல் அந்த அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்து வருகிறார். ஆறு போட்டிகளில் மூன்று அரைசதம் அடித்துள்ளார்.. விராட் கோலி முதல் மூன்று போட்டிகளில் சரியாக விளையாடவில்லை.

அதன்பின் நடைபெற்ற மூன்று ஆட்டங்களிலும் 40 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தியுள்ளார். ஏபி டி வில்லியர்சும் சிறப்பாக விளையாடி வருகிறார். தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் மட்டும் இன்னும் ஃபார்முக்கு வரவில்லை. அவரும் பார்முக்கு வந்து இந்த நான்கு பேரில் இரண்டு பேர் சிறப்பாக விளையாடினால் ஆர்.சி.பி.க்கு பேட்டிங்கில் பிரச்சனை இருக்காது.

பந்து வீச்சில் கிறிஸ் மோரிஸ் அணிக்கு திரும்பியிருப்பது அநத அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. வேகப்பந்து வீச்சில் சைனி, இசுரு உடானா ஆகியோர் உள்ளனர். வாஷிங்டன் சுந்தர் பவர் பிளேயில் சிறப்பாக பந்து வீசுகிறார். சாஹர் கடந்த இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை.

கொல்கத்தா அணி கடந்த இரண்டு போட்டிகளில் அதன் யுக்தியை மாற்றியுள்ளது. மேலும், இரண்டு போட்டிகளில் 170 ரன்களுக்குள் அடித்து சிஎஸ்கே, பங்சாப் அணியை வீழ்த்தியுள்ளது. இந்த நம்பிக்கையுடன் களம் இறங்கும்.

சுனில் நரைனை தொடக்க வீரரில் இருந்து தூக்கி திரிபாதியை களம் இறக்கியுள்ளது. மோர்கனை முன்வரிசையில் களம் இறக்குகிறது. ஷுப்பமான் கில் அந்த அணியின் நங்கூரம். அதிகமான பவர் ஹிட்டரை வைத்துள்ளதால் ஷார்ஜாவில் நாளை அதிகமான சிக்சர்களை பார்க்கலாம்.

பந்து வீச்சை பொறுத்த வகையில் சுனில் நரைன் அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். கடந்து இரண்டு போடடிகளிலும் அவது பந்தை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர். பேட் கம்மினஸ், நாகர்கோட்டி, ஷிவம் மவி, அந்த்ரே ரஸல் போன்ற வேகப்பந்து உள்ளனர்.

இரண்டு அணிகளும் தலா 6 போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றி பெற்றுள்ளது. ஐந்தாந்து வெற்றிக்காக கடுமையாக போராடும்.

தலைப்புச்செய்திகள்