Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி: காவல்துறையினர் பங்கேற்பு

அக்டோபர் 11, 2020 06:33

திருச்சி: மணப்பாறையில் ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் காவல்துறையினர் சார்பில் ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

காமராஜர் சிலையில் இருந்து துவங்கிய பேரணியை மணப்பாறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிருந்தா கொடியசைத்து துவக்கி வைத்தார். இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து பேரணியாக சென்ற காவல்துறையினர் ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணிந்து வாகனங்களில் பயணிக்குமாறும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.

பேரணியானது கோவில்பட்டி சாலை, மாரியம்மன் கோவில், திருச்சி சாலை புதுத்தெரு, பேருந்து நிலையம், மதுரை சாலை, திண்டுக்கல் சாலை வழியாகச் சென்று பெரியார் சிலை அருகே முடிவடைந்தது. பேரணியின் முடிவில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்தும், ஹெல்மெட் மற்றும் சீல்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும் துணைகண்காணிப்பாளர் பிருந்தா பேசினார். இதில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பேரணியில் கலந்துகொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்