Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் மேலும் 73,272 பேருக்கு கொரோனா உறுதி: 926 பேர் உயிரிழப்பு

அக்டோபர் 10, 2020 06:49

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,07,416 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 69,79,423 தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக   பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 73,272 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 69,79,423 ஆக உயர்ந்தது.

* புதிதாக  926 பேர் இறந்துள்ளனர், இதனால் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 107416 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 82753 பேர் குணமடைந்துள்ளனர், இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 5988822 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  883185 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 85.81% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.54% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 12.65% ஆக உயர்ந்துள்ளது.

* கொரோனா பாதித்தோர் அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், ஆந்திரா 2-வது இடத்திலும், கர்நாடகா 3-வது இடத்திலும், தமிழ்நாடு 4-வது இடத்திலும் இருந்து வருகிறது.

மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!

மகாராஷ்டிரா: சிகிச்சை பெறுவோர்: 236947; குணமடைந்தோர்: 1229339; இறப்பு: 39732

தமிழகம்: சிகிச்சை பெறுவோர்: 44197; குணமடைந்தோர்: 591811; இறப்பு: 10120

டெல்லி: சிகிச்சை பெறுவோர்: 21955; குணமடைந்தோர்: 276046; இறப்பு: 5692
     
கேரளா: சிகிச்சை பெறுவோர்: 91841; குணமடைந்தோர்: 175304; இறப்பு: 955

கர்நாடகா: சிகிச்சை பெறுவோர்: 118870; குணமடைந்தோர்: 561610; இறப்பு: 9789

ஆந்திரா: சிகிச்சை பெறுவோர்: 47665; குணமடைந்தோர்: 691040; இறப்பு: 6159

தலைப்புச்செய்திகள்