Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் 

அக்டோபர் 08, 2020 05:44

கும்பகோணம்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்  திருவிடைமருதூர் வட்டார கிளையின் செயற்குழு கூட்டம் கும்பகோணத்தில் நடந்தது.  கும்பகோணத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, திருவிடைமருதூர் வட்டார கிளையின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு லாடமுத்து தலைமை தாங்கினார். வட்டாரச் செயலாளர் மறைமணி முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொருளாளர் நாகராஜன் கலந்து கொண்டார். மாவட்ட துணைத் தலைவர் சௌந்தரராஜன் மற்றும் மாவட்ட பிரதிநிதி புவனபதி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் இயக்கத்தின் சார்பாக தமிழக முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சரிடம் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் ஒரு கோடியே 6 லட்சம் வழங்கி உள்ளது. அதற்கு நம் வட்டார கிளை சார்பாக நிதியுதவி வழங்கிய இயக்கப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்தல் உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தலைப்புச்செய்திகள்