Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பயிர் காப்பீடு தொகை வழங்கததை கண்டித்து ஆட்சியர் ஆஃபிஸில் குடியேறும் போராட்டம்

அக்டோபர் 06, 2020 06:30

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தி்ல் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்காதைத கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில்  பயிர்காப்பீடு நிலுவைத்தொகையை வழங்கக்கோரி குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

கடந்த 2019ம் ஆண்டுக்கான பயிர்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையினை வழங்கும் வரை  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேரும் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 117 வருவாய் கிராமங்களில் உள்ள 45,000 விவசாயிகளுக்கு 2018 -19ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் தொகை வழங்காததை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கம் விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாய், தலையணையுடன் குடியேறும் போராட்டத்தி்ல் ஈடுபட்டனர்.

அதன்படி, ஏராளமான விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டு ஊர்வலமாக சென்று குடியேற சென்றபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அப்போது காவல்துறையினருக்கும், போராட்டகாரர்களும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இப்போராட்டத்தில் பெண்கள் உள்பட ஏராமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்