Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

50 அடி ஆழ கிணற்றில் விழுந்த நாய்: தீயணைப்புத்துறையினர் மீட்பு

அக்டோபர் 06, 2020 06:24

ஆவடி: திருமுல்லைவாயல் அருகே சுமார் 50 அடி ஆழத்தில் உள்ள கிணற்றில் விழுந்த நாயை ஆவடி தீயணைப்பு துறையினர் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் சிவசக்தி நகரில் சந்தீப் குமார் என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சந்தீப் குமார் அவரது வீட்டின் அருகில் உள்ள சுமார் 50 அடி ஆழ கிணற்றில் செல்லப்பிராணி நாய் ஒன்று தவறி விழுந்தது.

இதை அறிந்த சந்தீப் குமார் உடனடியாக தீயணைப்பு காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின்பேரில் விரைந்து வந்த ஆவடி தீயணைப்பு துறை நிலைய  அதிகாரி வீர ராகவ ராவ் தலைமையில், முன்னணி தீயணைப்பு வீரர் நாகராஜ், தீயணைப்பு அதிகாரி சுப்பையா ஆகியோர் சுமார் 3 மணி நேரம் போராடி கிணற்றில் விழுந்த செல்லப்பிராணியான நாயை ஆவடி தீயணைப்புத்துறையினர் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

பத்திரமாக செல்லப்பிராணியை மீட்ட தீயணைப்பு துறை வீரர்களுக்கு திருமுல்லைவாயில் பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்