Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடகத்தில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு நூதன தண்டனை

அக்டோபர் 05, 2020 05:57

ஹாவேரி: கர்நாடகத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு நகர்புறங்களில் ரூ.1,000, கிராமப்புறங்களில் ரூ.500 அபராதமாக விதிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி நகர்புறங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் ரூ.1,000-ம், கிராமப்புறங்களில் ரூ.500-ம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அரசின் இந்த முடிவுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ஹாவேரி டவுனில் போலீசார் முகக்கவசம் அணியாமல் வருபவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் இருந்து போலீசார் அபராதம் விதிக்கவில்லை.

அதற்கு மாறாக முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை கொரோனா பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை முடிவில் கொரோனா இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். வைரஸ் தொற்று இல்லாதவர்களை மீண்டும் ஒருமுறை முகக்கவசம் அணியாமல் வரகூடாது, அப்படி வந்தால் கட்டாயம் அபராதம் வசூலிப்போம் என்று போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

தலைப்புச்செய்திகள்