Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பார்முக்கு வந்த விராட்: 8 விக்கெட்டில் ராஜஸ்தானை வீழ்த்தியது ஆர்சிபி

அக்டோபர் 04, 2020 07:11

ஆர்சிபி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலன ஆட்டம் அபு தாபியில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் அடித்தது. பின்னர் 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி பேட்டிங் செய்தது. ஆரோன் பிஞ்ச், தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ஆரோன் பிஞ்ச் 3 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து படிக்கல் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். தேவ்தத் படிக்கல் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த, முதல் மூன்று போட்டியில் சொதப்பியதால் விராட் கோலி கவனமாக விளையாடினார்.
 
ஓவர் செல்ல செல்ல அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். படிக்கல் 37-வது பந்தில் அரைசதம் அடித்தார். நான்கு போடடிகளில் 3-வது அரைசதம் இதுவாகும். மறுமுனையில் விராட் கோலி 41 பந்தில் அரைசதம் அடித்தார்.

அணியின் ஸ்கோர் 15.5 ஓவரில் 124 ரன்னாக இருக்கும்போது படிக்கல் 63 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். விராட் கோலி 18-வது ஓவரில் மூன்று பவுண்டரிகள் விளாச, 19.1 ஓவரில் 158 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

விராட் கோலி 53 பந்தில் 72 ரன்களுடனும், டி வில்லியர்ஸ் 10 பந்தில் 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தலைப்புச்செய்திகள்