Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேலும் 100 லாரிகளில் சென்னையில் குடிநீர் சப்ளை

மார்ச் 21, 2019 09:02

சென்னை: பருவ மழை சரியாக பெய்யாததால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னையில் கோடை வெயில் கொளுத்தி வருவதையொட்டி சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்பட 4 ஏரிகளும் வறண்டு வருகின்றன. 

கோடையில் குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது. சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் மூலம் டேங்கர் லாரிகளில் குடிதண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு தற்போது லாரிகளில் வழங்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை. மேலும் காலதாமதமாக குடிநீர் லாரிகள் வருகின்றன. குடி தண்ணீர் டேங்கர் லாரிகளின் சப்னை எண்ணிக்கையை அதிகரிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

திருவல்லிக்கேணி, சூளைமேடு, அடையாறு பகுதிகளில் குடிநீர் லாரிகள் ‘புக்‘ செய்து 20 நாட்களுக்கு பிறகுதான் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வரவில்லை. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. குடிதண்ணீர் தேவையை சமாளிக்க கூடுதல் லாரிகளில் தண்ணீர் வழங்க அப்பகுதி மக்கள் மெட்ரோ குடிநீர் வாரியத்தை வலியுறுத்தி வந்தனர். 

சென்னை மாநகர் குடிநீர் தேவையை சமாளிக்க டேங்கர் லாரி எண்ணிக்கையை அதிகரிக்க மெட்ரோ குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. தற்போது 7071 லாரிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. 2600 கட்டண குடிநீர் லாரிகளும் செயல்படுகிறது. 

மேலும் 100 டேங்கர் லாரிகளில் குடிநீர் வழங்க மெட்ரோ குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. லாரிகளில் குடிநீர் நிரப்பும் பகுதிகளில் 100 லாரிகள் கூடுதலாக செயல்பட்டு குடிதண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க உள்ளது. 
 

தலைப்புச்செய்திகள்