Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பழனியில் தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

செப்டம்பர் 29, 2020 10:36

பழனி: மத்திய வேளாண் சட்டத்தை எதிர்த்து பழனியில் பல்வேறு இடங்களில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் வேளாண் மசோதாவை தாக்கல் செய்து இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்று தற்போது குடியரசு தலைவரின்ஒப்புதலையும் பெற்று சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த வேளாண்சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறி தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணிக்கட்சிகள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பழனியில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பழனி நகர், ஆயக்குடி, பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி, கோதை மங்களம், பாப்பம்பட்டி உள்ளிட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழனி பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. விடுதலைசிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வாடு ப்ளாக்மற்றும் திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர்கலந்துகொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்