Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தென்காசியில் நகரும் நியாயவிலைக்கடை துவக்கம்

செப்டம்பர் 27, 2020 08:28

தென்காசி: தென்காசி மாவட்டம் கூட்டுறவுத்துறையின் மூலம் சங்கரன்கோவில் கூட்டுறவு பண்டகசாலையில் (கடை எண்:929) வைத்து  நகரும் நியாயவிலைக்கடையினை மாவட்ட ஆட்சியர்  அருண் சுந்தர் தயாளன் முன்னிலையில் அமைச்சர் ராஜலெட்சுமி கொடியசைதது  தொடங்கி வைத்தார்..
அதன்பின்னர் அமைச்சர் ராஜலெட்சுமி தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சரால் சட்டமன்ற பேரவையில் 20.03.2020 அன்று அறிவிக்கப்பட்ட அறிவிப்பின்படி மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்கும் பொருட்டு 3501  நகரும் நியாயவிலைகடைகள் துவக்கப்படும் என்று அறிவித்தார்.  அதன்படி தென்காசி மாவட்டத்தில் 28 கூட்டுறவு சங்கங்கள் மூலம் 6,730 குடும்ப அட்டைதாரா;கள் பயன்பெறும் வகையில் 46 அம்மா நகரும் நியாயவிலைகடைகள் திறக்கப்பட்டுள்ளன. சங்கரன்கோவில் கூட்டுறவு பண்டகசாலையின் கீழ் செயல்படும்

நொச்சிக்குளம் நியாயவிலைக்கடையிலிருந்து 1.5 கிலோமீட்டர் துாரத்தில் உள்ள வடக்கு ஆலங்குளம் கிராமத்தில் உள்ள 135 குடும்ப அட்டைதாராகள் பயன்பெறும் வகையில் அம்மா நகரும் நியாயவிலைகடைகள துவங்கி வைக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 4 அம்மா நகரும் நியாயவிலைகடைகளும், தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 11 அம்மா நகரும் நியாயவிலைகடைகளும், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 16 அம்மா நகரும் நியாயவிலைகடைகளும், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 9 அம்மா நகரும் நியாயவிலை கடைகளும், வாசு தேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 6 நகரும் நியாய விலைகடைகள் என மொத்தம் 46 நகரும் நியாய விலைகடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று வினியோகம் செய்யும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் ராஜலட்சுமி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மண்டல இணைபதிவாளர் பிரியதர்சினி, தென்காசி மாவட்ட வழங்கல் அலுவலர் கோகிலா, கூட்டுறவு துணைபதிவாளர்கள் முத்துசாமி, குருசாமி, .விரபாண்டி, சங்கரன்கோவில் கோட்டாட்சியர் முருகசெல்வி, மற்றும் முக்கிய பிரமுகர்கள், அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்