Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விஜயகாந்த் உடல்நலம் விசாரித்த விஷால்

செப்டம்பர் 25, 2020 11:36

சென்னை: உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விஷால் கேட்டு அறிந்திருக்கிறார். 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த 22-ம் தேதி உடலை சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

அதேவேளையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தே.மு.தி.க. சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், வழக்கமான மருத்துவமனை பரிசோதனை நடத்த மருத்துவமனை வந்ததாகவும், அப்போது லேசான கொரோனோ அறிகுறி இருந்ததாகவும், தற்போது பூரண குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விஜயகாந்தின் உடல்நலம் குறித்து அவரது மைத்துனர் எல்.கே.சுதீஷை ரஜினிகாந்த், சத்யராஜ், சரத்குமார் ஆகியோர் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். இந்நிலையில் நடிகர் விஷாலும் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து கேட்டு அறிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தலைப்புச்செய்திகள்