Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுவையில் களைகட்டும் கஞ்சா விற்பனை: மக்கள் விழிப்புணர்வு மையம் குற்றச்சாட்டு

செப்டம்பர் 24, 2020 07:20

புதுச்சேரி:  புதுவையில் களைகட்டும் கஞ்சா விற்பனையை தடுத்து அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,''  என்று மக்கள் விழிப்புணர்வு மைய புதுச்சேரி .தலைவர் மணிகண்டன் தெரிவித்தார். புதுச்சேரி நகர்புறங்களில் மற்றும் கிராமபுறங்களில் கஞ்சா விற்பனை களைகட்டி வருகிறது. மதுபோதைக்கு அடிமையானவர்களுக்கு மதுபானம் விலை அதிகரித்த காரணத்தால், வேறு விதமான போதையை மதுபிரியர்கள் நாட தொடங்கிவிட்டனர்.

அந்த வகையில் புதுச்சேரியில் அரியாங்குப்பம், வில்லியனூர் போன்ற பல பகுதிகளில் கஞ்சா விற்பனை என்பது அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனால் புதுவையில் கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கஞ்சா உள்பட பல விதமான போதை வஸ்துக்கள் தற்போது எளிதாக நகர்புறங்களில் கிடைக்கிறது. இதனை பெரும்பாலும் மதுபிரியர்கள் மட்டுமின்றி படித்த இளைஞர்களும் பெருமளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளது வேதனை அளிக்கக்கூடியதாக உள்ளது.

கொரோனா ஒழிக்க போராடி வரும் புதுசேரி அரசு, கஞ்சா, கள்ளசாராயம் போன்ற போதை வஸ்துக்களையும் காவல் துறையின் கடுமையான நடவடிக்கையின் மூலம் ஒழிக்க வேண்டுமென மக்கள் விழிப்புணர்வு மையம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
மக்கள் விழிப்புணர்வு மைய புதுச்சேரி .தலைவர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்