Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி: திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. ஏற்பாடு

செப்டம்பர் 24, 2020 07:17

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் வழிகாட்டுதல்படி, மாவட்டத்தில் உள்ள, அனைத்து காவல் நிலையங்களிலும், பொதுமக்கள் மத்தியில்,  கொரோனா உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அந்தந்த காவல் நிலையத்தாரால், அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில், சுத்தமல்லி காவல் நிலைய உதவி ஆய்வாளர்  பாலகிருஷ்ணன் மற்றும் பத்தமடை காவல் நிலைய, சிறப்பு உதவி ஆய்வாளர் ஜேக்கப் ஆகியோர், தங்கள் பகுதிகளில் உள்ள, இளைஞர்களை  சமூக இடைவெளியில் நிற்கவைத்து, கொரோனா" வைரஸ் தடுப்புக்கான,  முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய, விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.

மேலும், இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களிடம்,  சாலைப் பாதுகாப்புகள் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். ஓட்டுநர் உரிமம் இல்லாமல்,  இரு சக்கர வாகனங்களில், ஒருபோதும், பயணம் செய்யக்கூடாது. இருசக்கர வாகனங்களை ஓட்டும்போது, கட்டாயம்  தலைக்கவசம் அணிந்திருக்க  வேண்டும். கைகளை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

வெளியில் போய்விட்டு வீட்டுக்குள் நுழைந்தவுடன், கைகளை சோப்பு போட்டு, கழுவ வேண்டும். சானிடைசர்கள், கையுறைகள் மற்றும் முகக்கவசங்கள் ஆகியவற்றை பயன்படுத்திட வேண்டும். பொது இடங்களில், சமூக இடைவெளியினைப் பின்பற்றி, நடந்திடல் வேண்டும் எடுத்துக் கூறினர். காவல்துறையினர் நடத்திய, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று, பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
 

தலைப்புச்செய்திகள்