Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சட்டமன்றத்தேர்தலில் தற்போதைய கூட்டணியில் இருந்து போட்டியிடுவோம்: பா.ஜ.க. தலைவர்

செப்டம்பர் 24, 2020 07:13

தென்காசி: சங்கரன்கோவிலில் தமிழ் மாநில பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வருகின்ற சட்டமன்றத்தேர்தலில் தற்போதைய கூட்டணியில் இருந்து போட்டியிடுவோம்,''  என தெரிவித்தார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு செல்லும் பா.ஜ.க. மாநிலத்தலைவர் முருகனுக்கு சங்கரன்கோவிலில் தென்காசி மாவட்ட பா.ஜ.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநிலத் தலைவர் வருவதை அறிந்த ஏராளமான பா.ஜ.க. தொண்டர்கள் திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

பின்னர் அங்கு குவிந்திருந்த பா.ஜ.க. தொண்டர்கள் வைத்திருந்த மாலைகள், பைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் காவல்துறையினர் சோதனை செய்தனர்.
அதன்பின் தமிழ் மாநில பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தெரிவித்ததாவது:
கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் உத்வேகத்துடன் பணி செய்துகொண்டிருக்கின்றனர். இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்து விட்டார்கள். அதை தலைமை அறிவிக்கும், வருகிற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தற்போதைய கூட்டணியே தொடரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின்போது மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாவட்ட தலைவர் ராமராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டித்துரை, மாவட்ட பொது செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராம்குமார், சங்கை வடக்கு ஒன்றிய செயலாளர்கள் சண்முகவேலு, மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் சண்முகையா, மாவட்ட துணைத் தலைவர் பாலகுருநாதன், தகவல் நுட்பபிரிவு முத்துமாரி செந்தில்குமார், கருப்பசாமி உள்ளீட்ட ஏராளமான பா.ஜ.க. தொண்டர்கள் உடனிருந்தனர்.

தலைப்புச்செய்திகள்