Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்திய அரசுக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்

செப்டம்பர் 24, 2020 06:29

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில்,  மத்திய அரசு கொண்டு வந்துள்ள, வேளாண் விரோத மசோதாக்களை, ரத்து செய்ய வலியுறுத்தி,   எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில், மத்திய அரசு அலுவலகம் முன்பாக,  முற்றுகை போராட்டம் நடத்தியயதுடன் திரளானோர் பங்கேற்று,  மத்திய அரசுக்கு எதிராக,  கோஷம் எழுப்பினர். திருநெல்வேலி  மாவட்டம், களக்காடு நகர "எஸ்.டி.பி.ஐ." கட்சி சார்பில், பா.ஜ.க.. அரசின் விவசாயிகளுக்கு எதிரான, மூன்று வேளாண் மசோதாக்களையும், திரும்பபெற வலியுறுத்தி, மத்திய அரசு அலுவலகமான,   பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பாக, முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

நகர துணைத் தலைவர் கமாலுதீன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் பீமாஸ் உசேன்,  நகர இணைச் செயலாளர் ஜாபர்டெக்ஸ் ஆகியோர்,  முன்னிலை வகித்தனர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின், தொழிற்சங்கப் பிரிவான, எஸ்.டி.டி.யூ.அமைப்பின், திருநெல்வேலி மாவட்டத் தலைவர் "களந்தை" மீராசா "கண்டன உரை" நிகழ்த்தினார்  அவர், தன்னுடைய உரையில், "விவசாயிகள் மற்றும் எதிர்கட்சிகளின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல், அவற்றை மீறி, அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருட்கள் உத்தரவாதச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களையும் நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில், பிரதமர் நரேந்திர மோடி  தலைமையிலான,  மத்திய பா.ஜ.க.அரசு நிறைவேறியுள்ளது.

இவற்றை, தேர்வு குழுவுக்கோ, நிலைக் குழுவுக்கோ அனுப்பி ஆராயாமல், எந்தவித திருத்தங்களும் இல்லாமல்,  குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது. இது, மிகவும் கண்டிக்கத்தக்கது ஆகும். இவ்வாறு களந்தை மீராசா, தன்னுடைய கண்டன உரை"யில், குறிப்பிட்டார். முற்றுகையின்போது, விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும், ஆரப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், நாங்குநேரி தொகுதி தலைவர் கவிஞர்கனி, வழக்கறிஞர் முகம்மது ஷபி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்