Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்த போலீசார் பணியிடை நீக்கம்: மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை    

செப்டம்பர் 24, 2020 06:20

திருநெல்வேலி: திருநெல்வேலியில், மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்த போலீசாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி..மணிவண்ணன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில்,  மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்த உதவி ஆய்வாளர், ஒரு தலைமைகாவலர் மற்றும் மூன்று காவலர்களை திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்" மணிவண்ணன், அதிரடியாக,  பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து, உத்தரவிட்டுள்ளார்.
அது பற்றிய விபரம் வருமாறு:

திருநெல்வேலி மாவட்டத்தில், சட்டவிரோதமாக, மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி, தொடர்ந்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், மணல் திருட்டிற்கு உடந்தையாக, காவல்துறையைச் சார்ந்த,   எவரேனும் செயல்பட்டால், அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஏற்கனவே எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், தீவிர குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் கருத்தையா, தலைமைக் காவலர் சுதாகர், காவலர்கள் ரத்தினவேல்,  முண்டசாமி,   லெட்சுமி நாராயணன் ஆகிய ஐந்து பேரும்,  மணல் கடத்தலுக்கு, உதவியாக இருந்தது. தெரியவந்தது. இது தொடர்பாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்குக்  கிடைக்கப் பெற்ற, ரகசிய  தகவல்களின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், அந்த  ஐவர் மீதும்,  உரிய நடவடிக்கை எடுத்ததுடன், அவர்களை, "பணியிடை நீக்கம்" (சஸ்பெண்ட்) செய்தும், உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுபோன்று, மணல் கடத்தலுக்கு உதவியாக, காவல்துறையின் உயர் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் எவரேனும் செயல்பட்டால்,  மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! என்று, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், மீண்டும் திட்டவட்டமாக  எச்சரித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்