Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விவசாயி என்பவர் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ஆதரிக்க மாட்டார்- மு.க.ஸ்டாலின்

செப்டம்பர் 23, 2020 10:06

சென்னை: விவசாயம் பற்றி தெரியாததால்தான் வேளாண் சட்டங்களை எதிர்ப்பதாக கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

வேளாண் சட்டங்களை எதிர்த்து பேசிய அதிமுக எம்பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனுக்கு விவசாயம் பற்றி தெரியாதா? விவசாயி என்பவர் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ஆதரிக்க மாட்டார். வேளாண் சட்டங்களில் குறைந்தபட்ச ஆதார விலை என்ற வார்த்தை எங்கிருக்கிறது என கண்டுபிடித்து சொல்ல முடியுமா?

மத்திய அரசின் சட்டங்களை பற்றி ஆராய்ந்து கருத்து சொல்ல விவசாயியாக இருக்க அவசியமில்லை. வேளாண்மை பற்றிய அடிப்படை அறிவு, விவசாயிகள் நலனில் அன்பு, அக்கறை இருந்தாலே போதும் என முதலமைச்சருக்கு பதில் அளித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்