Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நகரும் நியாய விலைக்கடைகள் கோவைக்கு வரப்போவது எப்போது? 

செப்டம்பர் 23, 2020 06:44

கோவை: ஒவ்வொரு பகுதிகளிலும் பொதுவான இடத்தில் நின்று பொது விநியோகத் திட்டத்தில் பொருள்கள் வழங்கப்படும் எனவும் இவை விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது,''  எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு முழுக்க நகரும் நியாயவிலைக் கடைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மாவட்டத்திற்கு 33 நகரும் நியாயவிலைக் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 3,501 நகரும் நியாய விலைக் கடைகளை தமிழகம் முழுவதும் இயக்கும் திட்டத்தை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் தற்போது கோவை மாவட்டத்திற்கு 33 நகரும் நியாயவிலைக் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஒவ்வொரு பகுதிகளிலும் பொதுவான இடத்தில் நின்று பொது விநியோகத் திட்டத்தில் பொருள்கள் வழங்கப்படும் எனவும் இவை விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே இந்தத் திட்டம் அமலுக்கு வந்துவிடும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்துவதற்கான வேலைகள் தீவ்ரமாக நடைபெற்று வருகின்றன.

கோவைக்கு இந்த நகரும் நியாயவிலைக் கடைகள் எப்போது வரும் என்று ரேஷன்கடைகார்கள் எதிர்பாத்து காத்திருக்கின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்