Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பரிசோதனை: வந்துவிட்டது ரோபோ!! 

செப்டம்பர் 23, 2020 06:37

சிங்கப்பூர்: கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக புதிய ரோபோக்களை சிங்கப்பூர் நாட்டின் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
ஒருவருக்கு கொரோனா இருப்பதை கண்டறிய பி.சி.ஆர். ரேபிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக மனிதர்களின் மூக்கு, தொண்டை ஆகிய பகுதிகளில் இருந்து சளி, எச்சில் மாதிரிகள் எடுக்கப்படுகின்றன.

மருத்துவ பணியாளர்கள் தகுந்த பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொண்டுதான் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, சிங்கப்பூா் தேசிய புற்றுநோய் மையம், சிங்கப்பூா் பொது மருத்துவமனை ஆகியவை பையாபோ சா்ஜிக்கல் என் நிறுவனத்துடன் இணைந்து ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளன.

'ஸ்வோபோ' என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ சுயமாக சிந்தித்து செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பரிசோதனையின் போது மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா பரவும் அபாயத்தை குறைக்கவே இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்