Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைப்பு: ரயில்வே அமைச்சர்

செப்டம்பர் 22, 2020 09:49

புதுடெல்லி: தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த நிதியாண்டு முடியும் வரை ரயில்வேயில் புதிய பணிகள் தொடங்கப்பட மாட்டாது,''  என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஒருவார காலமாக நடைபெற்று வருகிறது. மதுரை லோக்சபா தொகுதி எம்.பி. வெங்கடேசன் எழுப்பியுள்ள கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். 

தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் கட்டண வசூல் இல்லை என்று தெரிவித்துள்ளார். மாநில அரசுகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் இருந்து மட்டுமே கட்டணம் பெறப்பட்டது என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த நிதியாண்டு முடியும் வரை ரயில்வேயில் புதிய பணிகள் தொடங்கப்பட மாட்டாது. புதிய பாதை அமைக்கும் பணிகள், மாற்று பாதை பணிகள், இருவழித்தட திட்டங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன. எனினும், பாதுகாப்பு சார்ந்த திட்டங்கள், அவசர பணிகள் எதுவும் நிறுத்தி வைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்