Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கும்பகோணத்தில் இடதுசாரிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

செப்டம்பர் 20, 2020 06:58

கும்பகோணம்: கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தமிழகத்தில் வழங்கிய வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் வழங்குக, கொரோனா காலத்தை பயன்படுத்தி மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு கொள்கை, மின்சார திருத்த சட்டம் அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம், விவசாயிகளுக்கு வேலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகிய சட்டங்களையும் கொள்கைகளையும் கைவிட வேண்டும். 

கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை நாட்கள் அதிகரித்திடுக, மத்திய அரசின் விவசாய இதற்கான மானியத் திட்டத்தை விவசாய தொழிலாளர்கள் மற்றும் குத்தகை விவசாயிகளுக்கு விரிவுபடுத்திக உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிபிஎம் நகரச் செயலாளர் செந்தில்குமார், சிபிஐ எம் எல் நகரகுழு சங்கர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன் மாவட்ட பொறுப்பாளர்கள் கண்ணன், பார்த்தசாரதி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

தலைப்புச்செய்திகள்