Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பழங்குடியின மக்களுடன் பிறந்த நாள்: பூவிருந்தவல்லி வட்டாட்சியர் அசத்தல்

செப்டம்பர் 16, 2020 07:27

சென்னை:பூவிருந்தவல்லி வட்டாட்சியர் தனது பிறந்த நாளை பழங்குடியின மக்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
பூவிருந்தவல்லி அடுத்த படூர் கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட பழங்குடியின இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இதனை அறிந்த பூவிருந்தவல்லி வட்டாட்சியர் குமார் அவரது பிறந்த நாளை  பழங்குடியின மக்களுடன் இணைந்து கொண்டாடினார்.

அப்போது பழங்குடியின சிறுவர், சிறுமியின் முன்பு கேக் வெட்டி அதனை அவர்களுக்கு வழங்கி மகிழ்ந்தார். அப்போது அங்கிருந்து சிறுவர்கள் வட்டாட்சியர் குமாரை வாழ்த்தி பாடல் பாடி அசத்தினர். பின்னர் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 25 கிலோ அரிசி, மளிகைப் பொருட்கள், போர்வை,சத்து மருந்துகள் மற்றும் கொரொனா தடுப்பு உபகரணங்களை வட்டாட்சியர் வழங்கினார். பழங்குடியின மக்களுடன் அதிகாரி ஒருவர் தனது பிறந்த நாளை கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது அங்கிருந்த சிறுவர்கள் அவரை வாழ்த்தி பாடல் பாடி அசத்தினர்.
 

தலைப்புச்செய்திகள்