Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வடகிழக்கு டெல்லி கலவரம்: போலீசாரின் செயல் ப.சிதம்பரம் கடும் விமர்சனம்  

செப்டம்பர் 14, 2020 09:40

புதுடெல்லி:டெல்லி காவல்துறை நடவடிக்கை குற்றவியல் நீதி முறையை கேலிக்கு ஆக்கி உள்ளது, " என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடும் விமர்சனம் செய்துள்ளார். டெல்லியின் வடகிழக்கு பகுதிகளான ஜாஃப்ராபாத், ஷாகுர் பஸ்தி, சிவ் விஹார், சீலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பிப்ரவரி 24-26 வரை பயங்கர கலவரம் நடைபெற்றது. இந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். 581 பேர் காயமடைந்தனர்.

சி.பி.ஐ.எம். தலைவர் சீதாராம் யெச்சூரி, சுவராஜ் அபியனின் யோகேந்திர யாதவ் மற்றும் பல அரசியல் தலைவர்களின் பெயரை சேர்த்து உள்ளது.  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் டெல்லி காவல்துறை நடவடிக்கை குற்றவியல் நீதி முறையை "கேலிக்கு" ஆக்கி உள்ளது என தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

தகவல் மற்றும் குற்றப்பத்திரிகைக்கு இடையில் விசாரணை மற்றும் உறுதிப்படுத்தல் எனப்படும் முக்கியமான படிகள் உள்ளன என்பதை டெல்லி காவல்துறை மறந்துவிட்டதா? என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், டெல்லி கலவர வழக்கில் துணை குற்றப்பத்திரிகையில் சீதாராம் யெச்சூரி மற்றும் பல அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களை பெயரை சேர்ப்பதன் மூலம் டெல்லி காவல்துறை குற்றவியல் நீதி முறையை கேலிக்குள்ளாக்கியுள்ளது. இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்