Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை பல்வேறு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

செப்டம்பர் 13, 2020 09:38

மதுரை:நீட்தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்த மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக மாணவி உடலுக்கு தி.மு.க. அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்திய பின் மின் மயானத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை ரிசர்வ்லைன் 6ம் படை பட்டாலியன் காவலர் குடியிருப்பில் சார்பு ஆய்வாளராக
பணியாற்றிவரும் முருகசுந்தரத்தின் மகளான ஜோதி ஸ்ரீ துர்காவின் மகள் கடந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பின் நீட் தேர்வு எழுதியநிலையில் 110 மதிப்பெண் எடுத்து தோல்வி அடைந்தார். இந்நிலையில் தனியார் நீட் பயிற்சி மையத்தில் இந்த ஆண்டிற்கான தேர்வு எழுதுவதற்காக தொடர்ந்து படித்துவந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் இரவில் வீட்டில் தேர்வுக்காக
படித்துகொண்டிருந்த மாணவி துர்கா நேற்றுமுவதினம் தற்கொலை செய்துகொண்டதில் உயிரை இழந்தார். இதனையடுத்து மாணவியின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது.

இதனையடுத்து மாணவியின் குடும்பத்தினருக்கு வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆறுதல் தெரிவித்து மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சரவணன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் நீட் தேர்வை கண்டித்து மருத்துவமனை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடற்கூராய்வுக்கு பின் மாணவியின் உடல் பெற்றோர்களிடம் உடல் ஒப்படைக்கபட்டபோது மாணவியின் உடலை பார்த்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் உடல் தத்தனேரி மின்மயானத்திற்கு கொண்டுசெல்லபட்டு தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக தத்தனேரி மயானத்தில் வைக்கப்பட்ட மாணவியின் உடலுக்கு அ.ம.மு.க. நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைப்புச்செய்திகள்