Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிறிஸ்தவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்ற முடியுமா?: தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மார்ச் 19, 2019 09:48

சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதம் 18-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதிலும் பல்வேறு பள்ளிகளில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஏப்ரல் 18ம் தேதி பெரிய வியாழன் பண்டிகை என்பதால், கிறிஸ்துவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி தமிழ்நாடு பிஷப் கவுன்சில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  

“தேவாலயங்கள் இயங்கக்கூடிய கிறிஸ்துவப் பள்ளிகள் அதிகமாக உள்ள நிலையில், அந்த தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும், அதேசமயம் அந்த பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் இயங்கும்போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கிறிஸ்தவ பள்ளிகளில் செயல்படக்கூடிய வாக்குசாவடிகளை வேறு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும். இல்லையென்றால், தேர்தலை வேறு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது. 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிஷப் கவுன்சிலின் மனுவிற்கு தேர்தல் ஆணையம் நாளை பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். வழக்கின் விசாரணையையும் நாளைக்கு ஒத்திவைத்தார். 

தலைப்புச்செய்திகள்