Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவால் உயிர் போனாலும் பரவாயில்லை: அமைச்சர் ஆர்.வி. உதயகுமார் உருக்கம்

செப்டம்பர் 03, 2020 05:44

மதுரை: ''கொரோனாவால் தனது உயிர் போனாலும் பரவாயில்லை ஓட்டு போய்விடக் கூடாது என்பதற்காக தொண்டர்களிடம் கை கொடுக்க வேண்டியது உள்ளது,''  என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சமூக இடைவெளியை பின்பற்றுமாறு கூறினால் அதை தொண்டர்கள் கேட்பதேயில்லை என கவலைத் தெரிவித்தார். மேலும், தொண்டர்களிடம் கை கொடுக்கவில்லை என்றால் அவர்கள் கோபித்துக் கொள்வதாகவும் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

கொரோனா பரபரப்புக்கு மத்தியில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டன. அதிலும் குறிப்பாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாவட்டந்தோறும் ஆலோசனை கூட்டங்கள், நிர்வாகிகள் சந்திப்புகள் என முழு வீச்சில் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை அமைத்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் நிர்வாகிகளால் தொண்டர்களிடம் நெருக்கம் பாராட்டாமல் இருக்க முடியாது.

அந்த வகையில் தொண்டர்களுக்கு கை கொடுப்பது பற்றி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியிருப்பது சுவாரஸ்யமானது. மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கொரோனா தொற்று பரவுவதால் ஒருவருக்கு ஒருவர் பக்கத்தில் அமரவேண்டாம் எனக் கூறினால், தொண்டர்கள் அதை கேட்பதேயில்லை. அப்படித்தான் சேர்ந்து உட்காருவோம் எங்களை பிரிக்க பார்க்காதீர்கள் என தன்னிடம் கூறுவதாகவும் கவலை தெரிவித்தார்.

மேலும், சமூக இடைவெளியை பின்பற்றி தள்ளி பேசுமாறு கூறினால் தொண்டன் கோபித்துக் கொள்கிறான். இதனால் கொரோனாவால் தனது உயிர் போனாலும் பரவாயில்லை கட்சிக்கு கிடைக்கக்கூடிய ஓட்டு போய்விடக் கூடாது என்பதற்காக கை கொடுத்து பேச வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். கை கொடுக்கத் தயங்கும் நீ எங்களுக்கு எப்படி வாழ்க்கை கொடுப்பாய்? என சில தொண்டர்கள் உரிமையுடன் தன்னிடம் கேட்பதாகவும் அமைச்சர் உதயகுமார் கூறினார்.

தலைப்புச்செய்திகள்