Sunday, 28th April 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்த மாத இறுதியில் சசிகலா விடுதலை ?

செப்டம்பர் 03, 2020 02:39

சென்னை: இந்த மாதம் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் வி.கே.சசிகலா வெளியேவருவார் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், செப்டம்பர் மாதம் இறுதியிலோ அல்லது அக்டோபர் மாதம் முதல் வாரத்திலோ நிச்சயமாக சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவார். சிறை நன்னடத்தை விதிகளின் படி கடந்த மார்ச் மாதமே சசிகலா விடுதலை பெற தகுதியாகிவிட்டார். ஆனால் கோவிட் தொற்று, பொதுமுடக்கம் காரணமாக இந்த விடுதலை தள்ளிப்போய் இருக்கிறது. 

300 கோடி ரூபாய் சொத்து முடக்கம் குறித்து வருமானவரித்துறை சசிகலாவுக்கு அனுப்பிய நோட்டீஸ் அவருக்கு சென்று சேர்ந்ததா என்று தெரியவில்லை. சென்று சேர்ந்திருந்தால் சிறை சூப்பிரண்டு மூலமாக என்னை தொடர்பு கொண்டிருப்பார். அவர் தகவல் சொன்னவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்

2019இல் சசிகலாவிற்கு சம்பந்தமில்லாத 6 நிறுவனங்கள் சசிகலா பங்குதாரர் என கூறி வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில் அந்த நிறுவனங்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் வேண்டுமானால் அந்த நிறுவனங்களை கையகப்படுத்திக் கொள்ளலாம் என்றும் சசிகலா நீதிமன்றத்தில் தெரிவித்தார். தற்போது 10 மாத கால தாமதித்திற்கு பிறகு 27 ஆண்டு கால நிறுவனத்தின் சொத்துக்களை சசிகலா சொத்துக்கள் என பினாமி கூறுகிறார். 

இறுதியாக இந்த நிறுவனத்தில் 2013ஆம் ஆண்டுதான் சசிகலா பங்குதாரராக சேர்ந்தார். கம்பனிகளின் சொத்துக்கள் பங்குதாரர்களின் சொத்துக்களாகவோ அதன் இயக்குநர்களின் சொத்துக்களாகவோ கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. இது தவறான பார்வை உரிய ஆவணங்கள் கிடைத்த உடனே உரிய பதிலை அளிப்போம். கடந்த 7 மாத காலமாக கோவிட் முடக்கத்தால் சசிகலாவை சந்திக்க முடியவில்லை” என தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்