Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போட்டியின்றி தேர்வாகும் டி.ஆர்.பாலு?

செப்டம்பர் 02, 2020 08:16

சென்னை: திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் இன்று வேட்புமனு பெற்றுக்கொள்ளலாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், பொருளாளராக டி.ஆர்.பாலு, எவ.வேலு, ஆ.ராசா ஆகியோரில் ஒருவர் தேர்வாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் திமுக பொருளாளர் பதவிக்கு போட்டியிடவில்லை என்பதால் வேட்புமனு வாங்கப்போவதில்லை என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார். மேலும் திமுக பொருளாளர் பொறுப்புக்கு கனிமொழி, எ.வ.வேலு ஆகியோர் போட்டியிடவில்லை என தகவல் வெளியாகி உள்ளன.

இதனால் திமுக பொருளாளர் பொறுப்புக்கு போட்டியின்றி டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்