Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மரம், செடிகளுக்கு சிறப்பு வழிபாடு 

ஆகஸ்டு 31, 2020 10:59

கரூர்: அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மரம், செடிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. 

ராஷ்டீரிய ஸ்வயம் சேவக சங்கம், பிரியாவரன் கதிவிதி மற்றும் இந்து ஆன்மீகம் மற்றும் சேவை அறக்கட்டளை இணைந்து இயற்கை வழிபாடு செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன் படி 30.08.2020 ஞாயிற்று கிழமை காலை 10 மணியளவில் சர்சங்கசாலக் பரம பூசனிய மோகன் ஜி பாகவத் வழிபாட்டை துவக்கி வைத்தார். தமிழகத்தில் கரூர் மாவட்டம் குளித்தலையில்  அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அருள்வேலன் ஜி குடும்பத்தினருடன்  வீட்டில் உள்ள மரங்கள் மற்றும் செடிகளுக்கு சிறப்பு வழிபாடு  செய்தார். 

தமிழகம் முழுவதும் உள்ள கிராமம் மற்றும் நகரங்களில் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க தகுந்த நடவடிக்கைகளை எடுத்து மரங்களை நட்டு பசுமை நிறைந்த கிராமங்களாகவும், நகரங்களாகவும் மாற்ற தமிழக அரசு உடனே அனைத்து வித நடவடிக்கையும் எடுக்க வேண்டுமெனவும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தகுந்த இடவசதிகள் உள்ள  அனைத்து திருக்கோயில்களிலும்  நந்தவனங்கள் மற்றும் கோசாலைகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறைக்கு ஆணை பிறப்பிக்க வேண்டுமெனவும் தமிழக அரசை அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுவதாக அருள்வேலன் கூறினார்.

தலைப்புச்செய்திகள்