Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சூரிய மின்சக்தி உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கும் ரயில்வே துறை 

ஆகஸ்டு 27, 2020 03:59

புதுடெல்லி: சோலார் எனப்படும் சூரிய மின்சக்தி உற்பத்தி பிரிவுகளை அமைக்க ரயில்வே துறை முன்னுரிமை அளித்துள்ளது. ரயில்வே துறையின் நடப்பு ஆண்டுக்கான மின் தேவை 21 பில்லியன் யூனிட் ஆக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2030ம் ஆண்டில் ரயில்வே மின் தேவை 33 பில்லியன் யூனிட் அளவாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மின்தேவை, பற்றாக்குறையை சமாளிக்க, மாசற்ற சக்தி பெற சூரிய ஒளி மின்னுற்பத்தியை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்வே காலியிடங்களில் சோலார் மின்னுற்பத்தி பிரிவுகள் அமைக்க மின்னுற்பத்தியாளர்களுடன் ரயில்வே ஆலோசனை நடத்தி வருகிறது.

தற்சார்பு கொள்கையின் படி 2030க்குள் 20,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளது. 2023ம் ஆண்டுக்குள் அகலப்பாதைகளை 100% மின்மயமாக்கவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது. தனியார் மின் உற்பத்தியாளர்களை சூரிய மின்சக்தி திட்டத்தில் இணைக்கவும் ரயில்வே துறை முன்னுரிமை அளித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்